ரணிலிடம் நாம் அமைச்சு பதவி கேட்கவில்லை: டலஸ் அழகப்பெரும
கோட்டாபய ராஜபக்ச முழுப் பொருளாதாரத்தையும் நாசமாக்கினார். ரணில் விக்ரமசிங்க முழு அரசியலையும் நாசமாக்குகின்றார். எனவே, இப்படிப்பட்ட ரணிலிடம் நாம் அமைச்சுப் பதவி கேட்டோம் என்பது பச்சைப் பொய் என சுதந்திர மக்கள் சபையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
'உங்களின் கட்சி எம்பிக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அமைச்சுப் பதவிகள் கேட்டதாக மகிந்தானந்த அளுத்கமகே எம்.பி. கூறுகின்றாரே?' என்ற கேள்விக்கு டலஸ் அழகப்பெரும எம்.பி. பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அரசியலில் சேறு பூசுவது சாதாரண விடயம்
அவர் மேலும் தெரிவிக்கையில், மஹிந்தானந்த அளுத்கமகேவின் பேச்சை எப்படி நம்புவது? நாங்கள் 13 பேர் அரசாங்கத்திலிருந்து விலகி வந்தோம். அவர்களுள் 5 பேர் அமைச்சுப் பதவியைத் தூக்கி வீசிவிட்டு வந்தனர்.
அமைச்சுப் பதவி தேவை என்றால் நாங்கள் அரசாங்கத்துடன் இருந்திருப்போமே. எதற்காக நாம் வெளியே வர வேண்டும்?என்று கேள்வி எழுப்பினார்.
அதுமட்டுமன்றி ”ரணிலுடன் அமைச்சுப் பதவி கேட்டு இரவில் பேச வேண்டுமா? நாம் அமைச்சுப் பதவி கேட்டோம் என்பது பச்சைப் பொய். அரசியலில் இப்படிச் சேறு
பூசுவது சாதாரண விடயம்” என்றார்.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
