சுடுகாடுகளில் ஏற்பட்ட நெரிசல்! வைத்தியசாலைகளில் குவிந்த சடலங்கள்
சுடுகாடுகளில் ஏற்பட்டுள்ள நெரிசல் நிலைமை காரணமாக வைத்தியசாலைகளில் இரண்டு தினங்களாக சடலங்கள் குவிந்து கிடந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது அரசியல் தலைமை மற்றும் பொலிஸார் தலையிட்டு இறந்தவர்களின் உடல்களுக்கு இறுதி கிரியைகளை செய்ய அனைத்தையும் தயார் செய்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
சடலங்களை தகனம் செய்ய பிரதேசங்களில் சுடுகாடுகளில் இடம் இல்லை எனவும் அந்த சுடுகாடுகளில் கொரோனாவால் இறப்பவர்களின் உடல்கள் மாத்திரமின்றி, சாதாரணமாக இறப்போரின் உடல்களும் தகனம் செய்யப்படுவதாகவும் இதனால் அவற்றில் நெரிசல் நிலைமை ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக இரண்டு, மூன்று தினங்கள் வைத்தியசாலைகளில் சடலங்களை வைத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இன்று நாளையும் அந்த சடலங்களை தகனம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.




