சுது அரலிய ஹொட்டலின் பாதுகாப்பு வேலியை நானே அகற்றுவேன்..! டட்லி சிறிசேன பகிரங்க அறிவிப்பு
பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தை அண்மித்துள்ள சுது அரலிய ஹொட்டலின் பாதுகாப்பு வேலியை தானே அகற்றிக் கொள்ளப்போவதாக குறித்த ஹொட்டலின் உரிமையாளரும் கோடீஸ்வர வர்த்தகருமான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரம் குளத்தின் கரையோரத்தை ஆக்கிரமித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள ட்டலி சிறிசேனவின் சுது அரலிய ஹொட்டல் அகற்றப்படும் என கூறி பின்னர் அதன் வேலி அகற்றப்படும் என அமைச்சர் லால்காந்த அண்மையில் கூறியிருந்தார்.
ஹிங்குரக்கொட வர்த்தக சம்மேளனத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டுரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்திருந்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,
“நான் பக்கச் சார்பாக பேசுவதாக நினைக்க வேண்டாம். நாட்டின் நெருக்கடிக்கு இணைந்து செயற்பட வேண்டும்.
சட்டம் அனைவருக்கும் சமம்
அத்தோடு அரசாங்கத்துடன் நட்புறவுடன் கடமையாற்றுவது கட்டாயமாகும். இவ்வாறு நான் கூறுவதால் சிலர் கதைக்கலாம், சுது அரலியா ஹோட்டலின் வேலியை அகற்றப் போவதால் பக்கச்சார்பாக செயற்படுவதாக? வேலி மட்டுமல்ல ஹோட்டலையும் அகற்றி கொள்ளலாம்.
சட்டத்துக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். சட்டத்துக்கு அனைவரும் சமனாகும். ஹோட்டல் வளவில் சட்டவிரோதமான காணி ஒன்று உள்ளது. அது உண்மை தான். ஆனால் சட்டம் எனக்கு மட்டும் பாயும் என்றால் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆனால், அவ்வாறான நிலைமைக்கு நான் தள்ளப்பட மாட்டேன். குறித்த ஹோட்டலை முழுமையாக உடைத்து புதிய ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



