டுபாயில் உள்ள குற்றக்கும்பலை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை
இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலை சேர்ந்த 10 பேர் டுபாயில் இருக்கின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களை அந்நாட்டில் இருந்து நாடு கடத்துவதற்கான கோரிக்கையை டுபாய் அரசுக்கு அனுப்ப இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என அறியமுடிகின்றது.
டுபாய் அரசால் ஏற்கனவே இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலின் தலைவர் ஒருவர், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததன் காரணமாக, டுபாயில் தலைமறைவாகியுள்ள குற்றக்கும்பல் உறுப்பினர்களை இலங்கைக்கு நாடு கடத்துவது தடைப்பட்டிருந்தது.
இது தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை டுபாய் அரசிடம் அளித்த முறைப்பாட்டில்
குறித்த குற்றக்கும்பல் உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பும் செயற்பாட்டை
இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தது.