இரட்டை குடியுரிமை பிரச்சினையில் தேரரை குறைகூறிய கோட்டாபய!
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் இருந்த இரட்டை குடியுரிமை சம்பந்தமான பிரச்சினையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை குறை கூறியதாக பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.
ஆட்சியாளர்கள் தமது மட்டத்தில் சிந்திக்கின்றார்களே தவிர நாட்டின் மட்டத்தில் சிந்திப்பதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இரட்டை குடியுரிமையை வைத்துக்கொண்டு, இலங்கையில் அமைச்சு பதவி மற்றும் ஜனாதிபதி பதவியில் ஏன் இருக்க வேண்டும் எனவும் நாலக தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இரட்டை குடியுரிமை பெற்றவர் ஏன் இலங்கையில் பதவிகளை வகிப்பதன் மூலம் நாட்டுக்கு எந்த பயனுமில்லை.
அந்த நபர்களுக்கே பயன்னை கொடுக்கும். ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்ட பின்னர் அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறி விடுவார்கள்.
இதனால், இரட்டை குடியுரிமை பெற்றவர்களை நாட்டின் ஆட்சி துறையில் பங்களிப்புச் செய்ய இடமளிப்பது பாரதூரமான தவறு எனவும் பெங்கமுவே நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார்.
You My Like This Video