வீடியோவுடன் காணித்திருட்டை அம்பலப்படுத்திய சாணக்கியன்! திக்குமுக்காடிய அரச அதிகாரிகள் (Video)
தான் அனுப்பிய கடிதமொன்றுக்கு பதில் கிடைக்காமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், அரச அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன் காணிகளை தனியார் காணியா அல்லது அரச காணியா என்பதை நானா போய் பார்ப்பது எனவும் அவர் வினவியுள்ளார்.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்றைய தினம் (24.07.2023) இடம்பெற்றிருந்தது.
இதன்போதே அவர் இந்த விடயத்தை கேட்டுள்ளதுடன், அவர் வீடியோவுடன் காணித்திருட்டு தொடர்பான பல விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக காணிப் பிரச்சினை, கால்நடை பண்னையாளர்கள் தொடர்பான பிரச்சினை , கனிய வளம அகழ்வு தொடர்பான பிரச்சினை, வீதி, சுகாதாரம், கல்வித்துறை , மின்சாரம் போன்ற பிரச்சினை சம்மந்தமாக அதிகமாக பேசப்பட்டது.
பண்ணையாளர்கள் தமது மாடுகளை மேய்துச்செல்ல பாதைகள் இல்லை கால்நடைகளுக்கு குடிநீர் இன்மை - மாடுகள் இறந்தவர்களுகான நட்ட ஈடுவழங்கலில் அநீதி இழைக்கப்பட்டதாகவும் பண்ணையாளர் தெரிவித்த நிலையில் பாதிக்கப்பட்ட அனைத்து பண்ணையாளர்களுக்கும் நஸ்ட ஈடுகளை வழங்க தகவல்களை பெறுமாறு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனால் பணிப்புரைகள் விடுக்கப்பட்டது.
மணல் கிரவள் உள்ளிட்ட கனிய வள அகழ்விற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதை தடை
செய்வது தொடர்பில் பேசப்பட்டது. மேலும் மண் அகழ்விற்கான
அனுமதிபத்திரம் வழங்க கூடாது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இக் கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தம் கருணாகரம் மற்றும் இரா.சாணக்கியன் கலந்துகொண்டிருந்ததுடன், அரச திணைக்கள அதிகாரிள் பொது அமைப்புக்களை சேர்ந்தோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலதிக தகவல்-குமார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |










இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
