மலையக பகுதிகளில் கருவாடு விலைகள் அதிகரிப்பு:ஒரு கிலோ கிராம் நெத்திலி 2000 ரூபா
மலையக பிரதேசங்களில் நெத்திலி கருவாட்டின் விலை மிகவும் அதிகரித்துள்ளதன் காரணமாக மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மலையக பகுதிகளில் ஒரு கிலோ கிராம் நெத்திலி கருவாடு ஆயிரத்து 700 ரூபா முதல் 2 ஆயிரம் ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.
சூரை கருவாடு ஒரு கிலோ கிராம் 2 ஆயிரத்து 700 ரூபா முதல் 2 ஆயிரத்து 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ கிராம் உருளை கருவாடு 2 ஆயிரத்து 200 ரூபா முதல் 2 ஆயிரத்து 300 ரூபா வரையான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்ட கருவாடு 3 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலைகள் காரணமாக உணவுக்காக கருவாட்டை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கூறியுள்ளனர்.
இந்த விலை அதிகரிப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள வர்த்தகர்கள், டீசல் விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு என்பன காரணமாக கருவாடுகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 19 மணி நேரம் முன்
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan