நுவரெலியாவில் வானூர்தி ஊடாக அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைப்பு
நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு Mi-17 உலங்கு வானூர்தி ஊடாக ஒரு தொகுதி உலர் உணவுகள் மற்றும் மருத்துவ பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்ட மோசமான வானிலையால் கடும் மழை மற்றும் வெள்ளத்துடன் மண்சரிவுகள் ஏற்பட்டது.
இடைத்தங்கல் முகாம்
இதில் அதிகம் கொத்மலை பகுதியில் பாதிக்கப்பட்ட பொது மக்களை தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இன்று (02) குறித்த உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களும் நுவரெலியா இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நுவரெலியா மாநகரசபை மைதானத்தில் இருந்து கொத்மலையில் உள்ள காமினி திசாநாயக்க மைதானத்திற்கு விசேட வானூர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.


புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 3 மணி நேரம் முன்
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam