மட்டக்களப்பில் விசேட தேவையுடையோர் இல்லத்திற்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு
மட்டகளப்பு - களுவாஞ்சிகுடியில் லயன்ஸ் கழகத்தினால் விசேட தேவையுடையோர் இல்லத்திற்கு ஒருதொகுதி உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
குறித்த நடவடிக்கையானது, இன்றயதினம் ( 24.02.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமூக சேவைகள்
இதன்போது, லயன்ஸ் கழகத்தின் முன்னாள் மாட்ட ஆளுனர் லயன் றொசான் காஞ்சன யாப்பா, மகரகம லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் சிறிஜெயசூரிய, களுவாஞ்சிகுடி வலயத் தலைவர் லயன் க.பா.சந்தசேனா மற்றும் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அதேநேரம், சேட தேவையுடையோர் வளாகத்தினுள் பயன் தரும் பழ மரக்கன்றுகளையும் நட்டுவைக்கப்பட்டுள்ளது.
மேலும், களுவாஞ்சிகுடி லயன்ஸ் கழகம் அப்பகுதியில் பல்வேறுபட்ட மனிதாபிமான மற்றும் சமூக சேவைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




