வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து: ஒருவர் மரணம்
எம்பிலிப்பிட்டிய - கல்வங்குவ பிரதேசத்தில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த வான் ஒன்று, 5 வாகனங்களை மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்று (03.09.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த வான், மற்றுமொரு வான், மூன்று முச்சக்கர வண்டிகள், ஒரு மோட்டார் சைக்கிள் என்பவற்றுடன் மோதியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் வானில் பயணித்த 73 வயதான வயோதிபரே உயிரிழந்துள்ளார். ஏனைய வாகனங்களில் பயணித்த நால்வர் படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில், விபத்துக்குக் காரணமான வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் மதுபோதையில் இருந்தமை பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
வேக கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம்
இதேவேளை கிளிநொச்சியிருந்து இருந்து முரசுமோட்டை பகுதிக்கு தனது வீட்டுக்கு செல்வதற்காக உழவு இயந்திரத்தில் பயணித்த பொழுது வெகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் அருகில் இருந்த கால்வாயில் விழுந்ததில் உழவு இயந்திர சாரதி காயமடைந்துள்ளதுள்ளார்.
காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: எரிமலை







திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
