கொழும்பிலிருந்து சூட்சுமமாக கடத்தப்பட்ட போதைப்பொருள் - யாழில் சிக்கிய மூவர்
கொழும்பில் இருந்து சூட்சுமமான முறையில் போதை மாத்திரைகளை கடத்தி வந்து விற்பனை செய்தவர் உள்ளிட்ட மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாசி கருவாடு, சம்பல் போத்தலுக்குள் மறைத்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டவரே யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸார் விசாரணை
போதை மாத்திரை கடத்தல் மற்றும் விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக கைதான மூன்று பேரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இரண்டு கிராம் மற்றும் மூன்று கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களும் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான ஜந்து பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 14 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam