இலங்கையில் ஏப்ரல் மாதத்தில் அதிகளவில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்
இலங்கையில் 2025 ஏப்ரல் மாதத்தில் அதிக அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவை கோடிட்டு அஸர்பஜான் செய்திச்சேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் ஒரு டன்னுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் படிக மெத்தம்பேட்டமைன் ஆகியவற்றை இலங்கை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக அந்த செய்தியி;ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் கைது
ஏப்ரல் மாதத்தில், கடந்த வியாழக்கிழமை வரை, 325.4 கிலோ ஹெரோயின் மற்றும் 778.6 கிலோ படிக மெத்தம்பேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், 3,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் 25.5 கிலோ ஹசிஸ் மற்றும் 553 கிலோ கேரள கஞ்சாவையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
