மருந்துப் பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி
நாட்டில் மருந்துப் பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் சில மருந்துப் பொருள் நிறுவனங்கள் பேணி வந்த ஏகபோக உரிமையை இந்த அரசாங்கம் தகர்த்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகப் பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மருந்துப் பொருள் விற்பனை
மருந்துப் பொருள் விற்பனையில் நிலவிய ஏகபோக உரிமையை தகர்த்ததன் காரணமாக 70000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட மருந்து தற்பொழுது 370 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடிவதாகத் தெரிவித்துள்ளார் முன்னணி சிங்களத் தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறெனினும், இவ்வாறு விலைக் குறைக்கப்பட்ட மருந்தின் பெயர் என்ன என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
மருந்துப் பொருட்களுக்கான ஏகபோக உரிமையை தகர்த்து பல நிறுவனங்களுக்கு மருந்து இறக்குமதி செய்ய அனுமதி வழங்ப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையினால் எதிர்காலத்தில் மருந்துப் பொருட்களின் விலைகள் மேலும் வீழ்ச்சியடையும் என பிரதி அமைச்சர் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
