படையினரின் கண்காணிப்பையும் மீறி வடக்கில் போதைப்பொருள் - மைத்திரி ஆதங்கம்
முப்படையினரினதும் பொலிஸாரினதும் 24 மணிநேர முழுநேரக் கண்காணிப்புக்குள் இருக்கும் வடக்கு மாகாணத்துக்குள் போதைப்பொருட்கள் எந்த வழியால் வருகின்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வியெழுப்பியுள்ளார்.
"போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணம் கல்வியில் மட்டும் இன்னமும் வீழ்ச்சியடையாமல் வீறுகொண்டு பயணிக்கின்றது.
போதைப்பொருளுக்கு அடிமையாகும் மாணவர்கள்
இந்தநிலையில், வடக்கில் பாடசாலை மாணவர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் கூட தற்போது போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருகின்றார்கள் என்ற செய்தி மிகவும் மனவருத்தத்தைத் தருகின்றது" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கில் இளையோர் சமூகத்தைக் குறிவைத்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் பெரும் புள்ளிகளைக் கண்டுபிடிக்க அனைத்து மட்டங்களிலும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வடக்கிலுள்ள இளையோர் சமுதாயத்தைப் போதைப்பொருள் பாவனையில் இருந்து மீட்டெடுக்க
பெற்றோர்கள் மற்றும் கல்வியலாளர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் அவர்
கேட்டுக்கொண்டார்.