கொழும்பு மாநகர சபையில் ஐஸ் - ஹெரோயின் விற்பனை
கொழும்பு மாநகர சபையில் ஐஸ் மற்றும் ஹெரோயின் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபை அலுவலக அறையில் ஊழியர்களுக்கு ஐஸ் மற்றும் ஹெரோயின் விற்பனை செய்ததாக மாநகர சபை சாரதி உதவியாளர் ஒருவரே நேற்று முன்தினம் (22.09.2025) 20,860 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக வலானா ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நேரத்தில்
சந்தேக நபர் மாநகர சபை துணைப் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஹெரோயின் மற்றும் ஐஸ் விற்பனை செய்வதாக வலான பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வலானா ஊழல் தடுப்புப் பிரிவினர் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கொழும்பு மாநகர சபை அலுவலகம் 03 இல் சாரதி உதவியாளராக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நேரத்தில் அவர் பணியில் இருந்துள்ளார், மேலும் சந்தேக நபர் அவர் பணிபுரிந்த அலுவலகத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



