460 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு
இலங்கை வந்த பிரித்தானியப் பிரஜை ஒருவரிடம் இருந்து 460 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் பாங்கொக் வழியாக இலங்கை வந்தடைந்த பிரித்தானியப் பிரஜை ஒருவரிடம் இருந்தே நேற்று (12) மாலை மேற்குறித்த போதைப் பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளது.
மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள்
சுங்கத்திணைக்கள பரிசோதனையின் போது குறித்த பிரித்தானிய யுவதியின் பயணப் பொதிகளுக்குள் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட போதைப்பொருள் 46 கிலோகிராம் எடை கொண்டது என்றும், அதன் சந்தைப் பெறுமதி 460 மில்லியன் ரூபா என்றும் தெரியவந்துள்ளது.
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரித்தானிய யுவதி, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
