நீண்ட காலமாக பல்கலைகழக மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம்:வியாபாரி கைது
அம்பாறை - ஒலுவில் பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்த போதைப்பொருள் வியாபாரியின் வீட்டை நேற்று (18.12.2022) பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது அங்கிருந்து பெருமளவில் போதைப்பொருட்களை மீட்டதுடன், 41 வயதுடைய போதைப் பொருள் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முற்றுகை
அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ எம்.எம். பண்டார விஜயதுங்கவின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பகீரதன் தலைமையிலான குழுவினர் சம்பவதினமான நேற்று மாலை ஒலுவிலில் பிரதேசத்திலுள்ள போதைப்பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது, அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 41 வயதுடைய வியாபாரியை கைது
செய்ததுடன் கஞ்சா மற்றும் புகையிலை கலந்து 300 கிராம் தூள், மாவா
என்றழைக்கப்படும் 1 அரை கிலோ போதைபொருள் மற்றும் கஞ்சாவை புகைப்பதற்காக
பயன்படுத்தப்படும் ஒ.சி.பி. என்ற பொருள், 30 பெட்டி போன்றவற்றை கைப்பற்றியுள்ளனர்.
மாணவர்களுக்கு போதைப்பொருள்
கைது செய்யப்பட்ட வியாபாரி நீண்ட காலமாக அந்த பகுதியிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு போதைப்பொருட்களை வியாபாரம் செய்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணையின் பின்னர் வியாபாரியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
