ஐஸ் போதைப்பொருளுடன் 8 பேர் யாழ். நகரப் பகுதிகளில் சிக்கினர்
யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளில் நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த இருவர் உட்பட 8 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இந்தக் கைதுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 8 பேரில் இருவர் நீண்டகாலமாக ஐஸ் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக அவர்கள், யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வாடகைக்கு அறைகளையும் பெற்று தங்கியிருந்துள்ளனர் என்று முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரிடம் இருந்தும் முறையே 6 கிராம் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

ஏனைய 6 பேரிடம் இருந்தும் சிறிதளவு ஐஸ் போதைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கையைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.