போதைப்பொருட்களை பயன்படுத்தும் சாரதிகள்! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
ஹெரோயின் மற்றும் பிற போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் சாரதிகளை அடையாளம் காண தேவையான சோதனை கருவிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளை அடையாளம் காணவும், பொது போக்குவரத்து பேருந்துகளை கண்காணிக்கவும் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்காக ஒவ்வொரு பாடசாலையிலும் மூன்று ஆசிரியர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நடவடிக்கை மூலம் பாடசாலைகளுக்குள் நுழையும் போதைப்பொருட்களை அடையாளம் காணவும், கட்டுப்படுத்தவும் முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.



