போதைப்பொருள் கடத்தல் பேர்வழி முரவத்தே சீப்பு கைது
பாரியளலான போதைப்பொருள் கடத்தல்காரரான முரவத்தே சீப்பு என்ற ஒகஸ்டஸ் ரோஷன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவின் விசேட பொலிஸ் குழுவினால் நேற்று(15.10.2026) முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடுப்பு காவல் உத்தரவு
சந்தேகநபரிடமிருந்து 36 கிராம் 210 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், இலத்திரனியல் தராசு ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர் மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் மொரட்டுவெல்ல பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு போதைப்பொருட்களைக் கொண்டுவந்து பொதியிட்டு, மொரட்டுவ மற்றும் கல்கிசை பகுதிகளை இலக்கு வைத்து நீண்ட காலமாக இந்த ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை மேலதிக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் தொடர்பில் தடுப்பு காவல் உத்தரவைப் பெற்று, அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகம் முன் அதிரடியாக களமிறங்கிய பொலிஸ் பேருந்துகள்! பிக்குகளின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி