வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் விசேட சோதனை! பொலிஸாரிடம் சிக்கிய 5 சாரதிகள்
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் போதைப்பொருள் பயன்படுத்திய ஐந்து சாரதிகளுக்கு எதிராக ச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடும் பேருந்து சாரதிகள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனரா என்ற பரிசோதனை இன்று (28.10.2026) மேற்கொள்ளப்பட்டது.
வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க கப்புக்கொடவின் வழிகாட்டலில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வைத்திய நிறுவனத்தின் பங்களிப்புடன் இந்தப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சட்ட நடவடிக்கை
இதன்போது, காலை 10 மணி வரையில் இ. போ. சபை மற்றும் தனியார் பேருந்துகளின் 65 சாரதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் ஐந்து பேர் போதைப்பொருள் பயன்படுத்தியமை பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாகத் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட சாரதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், விபத்துக்களையும் குறைக்கும் நோக்கில் இந்த விசேட பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.



