இந்தியாவில் இருந்து போதைப் பொருள் கடத்தல்-இலங்கையர் உட்பட மூன்று பேர் கைது
இந்தியாவில் இருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு கடத்திச் செல்லப்படவிருந்த சுமார் 110 கோடி இந்திய ரூபா பெறுமதியான பல்வேறு வகையான போதைப் பொருட்களுடன் மூன்று பேர் தமிழகத்தின் இராமநாதபுரம் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாரை சேர்ந்த ஒருவரும் இரண்டு இந்திய மீனவர்களும் கைது
தமிழகத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் மற்றும் இலங்கையின் மன்னாரை சேர்ந்த ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளனர்.
மீன்பிடியில் ஈடுபடுவது போல் படகில் கடத்திச் சென்ற அபின், கேரள கஞ்சா, ஐஸ், கஞ்சா எண்ணெய் உள்ளிட்ட போதைப் பொருட்களை இராமநாதபுரம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இராமநாதபுரம் பொலிஸின் புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இராமநாதபுரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
இந்தியாவில் இருந்து கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இலங்கைக்கு அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் கடல் வழியாக தங்கமும் கடத்தப்பட்டு வருவதாக தமிழக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.