கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய 190 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள்
பிரேசிலில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட பொதியில் 2.5 கிலோ கொக்கெய்ன் போதைப்பொருளை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்டகொக்கெய்ன் போதைப்பொருளின் சந்தைப்பெறுமதி சுமார் 190 மில்லியன் ரூபா எனவும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

சனல் 4 காணொளி மூலம் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்த முயற்சி! ஸ்ரீலங்கா ராமன்ய மகா நிகாய பகிரங்க எச்சரிக்கை
போதைப்பொருள் கையிருப்பு
கைப்பந்து வலையின் ஓரத்தில் இருந்த குழாயில் போதைப்பொருள் சூட்சசமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், அதிகாரியொருவர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பொதி கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் பெயருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கையிருப்பு மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.