ஒமிக்ரோனுக்கு மருந்து தயார்! வெளியான மகிழ்ச்சித் தகவல் (Video)
எங்கள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள ‘பாக்ஸ்லோவிட்’ மாத்திரையை எடுத்துக் கொண்டால், ‘ஒமிக்ரோன்’ வகை கோவிட் வைரசின் பாதிப்பில் இருந்து தப்பலாம் என பைசர் நிறுவன CEO ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து இயங்கும் பைசர் நிறுவனம் கோவிட் வைரசுக்காக, பாக்ஸ்லோவிட் என்ற மாத்திரையை தயாரித்துள்ளது.
கோவிட் அறிகுறிகள் தென்பட்ட மூன்று நாட்களில் இந்த மாத்திரை வழங்கப்பட்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் விகிதம் 89 சதவீதம் குறைந்து விடும்.
ஐந்து நாட்களுக்குள் இந்த மாத்திரை வழங்கப்பட்டால், அந்த ஆபத்து 88 சதவீதமாக குறைந்துவிடும் என, பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய எமது செய்திகளின் தொகுப்பு,