நாட்டில் போதைப் பொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
இலங்கையில் போதைப்பொருள் விலைகளில் மாற்றம் பதிவாகியுள்ளது என முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்பொழுது போதைப்பொருள் விநியோகம் மிதமிஞ்சிய அளவில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் போதைப் பொருளுக்கான விலை வீழ்ச்சி அடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி அளவில் இந்த அரசாங்கத்தினால் 1248 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்க அதிகாரிகள் 1160 கிலோகிராம் எடையுடைய ஹெரோயின் போதை பொருளை கைப்பற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்பொழுதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை போல் இந்த போதைப் பொருளைக் கொண்டு ஊடக கண்காட்சிகளை நடத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாத காரணத்தினாலும் கிராமங்களில் எந்த ஒரு வேலை திட்டத்தையும் முன்னெடுக்க முடியாத காரணத்தினாலும் அரசாங்கம் போதைப்பொருள் கைப்பற்றும் கண்காட்சியை முன்னெடுத்து வருவதாகவும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam