கடத்தல்காரர்களின் கோடிக்கணக்கான சொத்துக்களை பறிமுதல் செய்ய தயாராகும் அரசாங்கம்
அடுத்த வாரங்களுக்குள் 2 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான தெமட்டகொட ருவான் மற்றும் கரந்தெனியே சுத்தா ஆகியோருக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கட்டிடங்கள், வாகனங்கள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பிற சொத்துக்கள் உட்பட போதைப்பொருள் கடத்தல் மூலம் ஏராளமான பணம் வருமானமாக பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சொத்துக்கள் பறிமுதல்
அதற்கமைய, அவர்களுக்கு சொந்தமான சொத்துக்களை கைப்பற்றி பறிமுதல் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் அடுத்த 2 வாரங்களுக்குள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தெமட்டகொட ருவானுக்கு சொந்தமான 780 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தெமட்டகொட நகரில் உள்ள ஒரு கட்டடமும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட உள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா





வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கூலி படத்திற்காக நாகர்ஜுனா வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam
