யாழில் விளையாட்டுக் கழகம் ஒன்று மேற்கொண்ட முன்னோடி செயல்
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் சட்டவிரோத செயற்பாடுகளை தமது பகுதியில் முற்றாக அழித்தொழிப்பது என்னும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இன்று காலை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கசிப்பு குடிப்பதற்காக பலர் கூடியிருந்த காட்டுப்பகுதி திடீரென சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
கசிப்பு பீப்பாய்கள்
இந்த முற்றுகையின் போது கசிப்பு பீப்பாயை கைவிட்டு அங்கு கூடியிருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், கசிப்புடன் கசிப்பு பீப்பாய் சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தால் கைப்பற்றப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை சென்மேரிஸ் விளையாட்டுக் கழக தலைவரும் பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினருமான பி.அலஸ்ரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமது எல்லைக்குள் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை உடன் நிறுத்துமாறும் மீறினால் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைப்போமென சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கழகத்தின் முன்மாதிரியான குறித்த செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri