பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய போதைப்பொருள் வியாபாரி(Video)
காத்தான்குடியில் பொலிஸார் நடத்திய திடீர் சுற்றி வளைப்பில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரியொருவர் நேற்று(11.06.2023) கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய
போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம் தெரிவித்துள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், காத்தான்குடி டீன் வீதி ஜவ்பர் ஆலிம் வீதியில், குறித்த வியாபாரி ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு
இதன்போது அவரிடமிருந்து 5850 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் 19000 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த நபர் ஏற்கனவே மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை வழங்கப்பட்டு தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்படத்தக்கது.

கைதான சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபடவுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri