பெருந்தொகை பணம் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் வர்த்தகர் கைது..!
அம்பாறை - இகினியாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரகஹகெலே பகுதியில் நீண்டகாலமாக இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(16.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
அவர் விற்பனைக்காக ஐஸ் போதைப்பொருளைச் சிறிய பொட்டலங்களாகத் தயாரித்துக் கொண்டிருந்த வேளையில், பொலிஸாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 4,400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் , கஞ்சா 30 கிராம், 21,000 ரூபா பணம் மற்றும் அளவிடும் தராசு போன்ற பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் இளைஞர்களைப் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக்கி, இந்த வியாபாரத்தை மேற்கொண்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக இகினியாகல பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri