நாவற்குடா பகுதிக்குச் சென்ற போதைபொருள் வியாபரி கைது!
தனிமைப்படுத்தப்பட்ட காத்தான்குடி பகுதியிருந்து போதைபொருளை மட்டக்களப்பு நாவற்குடா பகுதிக்கு எடுத்துச் சென்ற போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய காத்தான்குடி பிரதான வீதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவர் தனிமைப்படுத்தப்பட்ட காத்தான்குடியில் இருந்து நாவற்குடா பிரதேசத்திற்குள் சென்றபோது மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவரிடம் இருந்து 10 கிராம் அசிஸ் போதைப்பொருளை மீட்டுள்ளதுடன் அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை புலனாய்வு பிரிவினர் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடள், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.