நகர்புற பாடசாலை மாணவர்களை குறி வைக்கும் போதைப்பொருள் வர்த்தகர்கள் - பெற்றோர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Sri Lanka Police Crime Branch Criminal Investigation Department Crime Drugs Arrest
By Dhushi Jul 16, 2026 01:25 PM GMT
Report

நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நகர்ப்புறப் பாடசாலைகளில் மாணவர்களுக்கிடையில் போதைப்பொருட்கள் பாவணை அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று(16.07.2026) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் காவல்துறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோகா தர்மசேன மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி! இடமாற்றம் தொடர்பான செய்திக்கு எதிர்ப்பு..

நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி! இடமாற்றம் தொடர்பான செய்திக்கு எதிர்ப்பு..

பாடசாலை மாணவர்களின் தற்போதைய கெதி

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேல் மாகாணத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கைது நடவடிக்கையையும், போதைப்பொருள் பழக்கங்களும் சமீபக்காலமாக அதிகரித்து வருகின்றன.

அனைத்து பாடசாலைகளையும் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான அவசியமான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக இலங்கை பொலிஸார் தற்போது சமூக பொலிஸ் அதிகாரிகளையும், சிவில் புலனாய்வு அதிகாரிகளையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

நகர்புற பாடசாலை மாணவர்களை குறி வைக்கும் போதைப்பொருள் வர்த்தகர்கள் - பெற்றோர்களுக்கான முக்கிய அறிவிப்பு | Drug Addiction On The Rise International Schools

இதன்படி, "ரதம ஏக்தா" என்ற தேசிய நடவடிக்கையின் கீழ், 21 வயதுக்குட்பட்ட 8,459 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பாடசாலைச் செல்லும் அல்லது செல்லாத 21 வயதுக்குட்பட்ட 161 சிறுமிகளும் அடங்குவார்கள்.

இதேவேளை, சாதாரண தரப் பரீட்சையில் தோல்வியுற்ற மாணவர்கள், நகர்ப்புறங்களில் வாழும் ஏழ்மை குடும்பத்திலிருந்து வரும் குழந்தைகள் ஆகியவர்களே இவ்வாறு போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்.

குறிப்பாக வெளிநாடுகளில் பெற்றோர்கள் இருக்கின்ற பிள்ளைகளும் இதில் அடங்குவார்கள்.

போதைக்கு அடிமையான இந்தக் குழந்தைகளை மறுவாழ்வு அளிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

எல்நினோவால் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் - பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு

எல்நினோவால் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் - பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு

கொழும்பில் ரூ.2 கோடி போதைப்பொருளுடன் பிரபல பாடசாலை ஆசிரியை கைது..!

கொழும்பில் ரூ.2 கோடி போதைப்பொருளுடன் பிரபல பாடசாலை ஆசிரியை கைது..!


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US