கொழும்பில் ரூ.2 கோடி போதைப்பொருளுடன் பிரபல பாடசாலை ஆசிரியை கைது..!
கொழும்பில் உள்ள ஒரு சர்வதேச பாடசாலையின் ஆசிரியை ஒருவரும், அவரது கணவரும் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் மாதம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(15.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வடக்கு பிரதேச புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையிலேயே இவ்வாறு தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டக்கல்வி மாணவி கைது
இதன்போது, கணவரிடம் இருந்து 1.6 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும், மனைவியிடம் இருந்து 149.150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
“மொதர மயூர” என அழைக்கப்படும் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரின் ஆதரவாளர்களாக இவர்கள் பணிப்புரிந்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த தம்பதியினர் சில காலமாக போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்றும், சந்தேக நபர், ஒரு தனியார் நிறுவனத்தில் சட்ட மாணவி என்றும், அதற்கான செலவுகளை ஈடுசெய்யும் நோக்கத்தில் இந்தப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மாளிககந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மனைவி 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இருவரும் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலை வழக்கை மூடிமறைத்த முக்கிய புள்ளி நாட்டைவிட்டு தப்பிச் செல்ல முயற்சி!