நாட்டில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் உள்ள இரண்டு கோடி மக்கள்தொகையில், சுமார் ஐம்பது இலட்சம் (50,00,000) பேர் பல்வேறு போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதுடன் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40,000 பேர் போதைப்பொருள் பாவனையினால் உயிரிழப்பதாகவும் தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை(National Dangerous Drugs Control Board) தெரிவித்துள்ளது.
அத்துடன் இவர்களில் சுமார் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் கஞ்சா போதைப்பொருள் பாவனையை நாடியுள்ளதாகவும், ஒரு இலட்சம் பேர் ஹெரோயின் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகவும் தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபையின் தலைவர் வழக்கறிஞர் சக்ய நாணயக்கார(Advocate Sakya Nanayakkara) குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் பாவனை
இதேவேளை, பெரும்பான்மையான பாடசாலை மாணவர்களிடையே புகையிலை பாவனை காணப்படுகின்ற போதிலும் பாடசாலைகளில் ஐஸ் போன்ற போதைப் பொருட்கள் தொற்று நோயாக பரவும் அபாயம் இதுவரை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டிலுள்ள மொத்த சனத்தொகையில் 15 இலட்சம் பேர் புகையிலை பாவனையிலும், இருபத்தைந்தாயிரம் முதல் முப்பதாயிரம் பேர் வரை பல்வேறு போதைப்பொருள் பாவனையிலும் ஈடுபட்டுள்ளதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 31 நிமிடங்கள் முன்

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
