கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுற்றுலா வருமானத்தில் வீழ்ச்சி
கடந்த 2025ம் ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் சுற்றுலாத்துறை வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை மத்திய வங்கி புள்ளி விபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இலங்கையின் சுற்றுலாத் துறை, நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஒன்பது மாதங்களில் சுமார் 2,245.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான வருமானத்தைப் பதிவுசெய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
சுற்றுலா வருமானத்தில் வீழ்ச்சி
கடந்த 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் ஈட்டப்பட்ட 2,472.9 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் இது சற்று சரிவைப் பதிவு செய்துள்ளது.

அதே நேரம் இந்த ஒன்பது மாத காலத்தில் மொத்தம் 1,693,679 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இதற்கிடையே செப்டம்பர் மாதத்தில் மட்டும் 185.6 மில்லியன் டொலர்கள் ஈட்டப்பட்டு, கடந்த ஆண்டின் செப்டம்பர் மாத வருமானமான 182.9 மில்லியன் டொலர்களை விட நேர்மறை வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.