285 குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு! சம்பிக்க ரணவக்க அதிரடிக் குற்றச்சாட்டு
நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் 285 பேருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளித்து விடுவித்துள்ளார் என ஐக்கிய குடியரசு முன்னணித் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.
திங்கட்கிழமை (19) பொதுமக்கள் கூட்டு எதிர்க்கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தள்ளார்.
கொழும்பு மேயர்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
'கடந்த சில நாட்களாக மகா சங்கம் ஜனாதிபதியிடம் அகிம்சை வழியில் கோரிக்கை விடுத்துள்ளது. அகிம்சை நடவடிக்கைகளைக் கலைக்கவும் அடக்கவும் பொலிசார் மற்றும் கட்சித் தொண்டர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மகாசங்கத்தினரின் பேரணிகளை கலைக்கும் அவரது பதிலை நாம் கண்டோம்.

மேலும், கொழும்பு மேயர் பொது வசதிகளையும் கழிப்பறைகளையும் மூடும் கொடூரமான சூழ்நிலையில் சிக்கியுள்ளார்.
இது மிகவும் அபாயகரமான போக்காகும். நல்லாட்சிக் காலத்தில் மட்டும், ஜே.வி.பி 560-க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியது. அவ்வாறு செய்வதன் மூலம், அரசாங்கம் செய்த எல்லாவற்றிற்கும் எதிராக அவர்கள் செயல்பட்டனர்.
ஆனாலும் அன்றைய அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொலிஸ் அதிகாரத்தை இந்த வழியில் பயன்படுத்தவில்லை. இதுவே அநுர குமார வீழ்ந்துள்ள நிலையைக் காட்டுகிறது.
நீதிமன்ற தடை உத்தரவு
சமூக ஊடகங்களில் மற்றவர்களுக்கு 'ஹா..ஹா' என்று எதிர்வினையாற்றி, அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதன் மூலம் அவர்களின் அரசியல் வளர்ந்திருந்தது.
ஆனால் நேற்று, அநுரவின் பேச்சுக்கு முன்னெப்போதும் இல்லாத 'ஹா..ஹா' மழை பொழிந்தது. நீதிமன்ற உத்தரவுகளுக்கு வெளியே எதுவும் செய்யப்படவில்லை என்று அவர் பதுளையில் கூறினார்.

ஆனால் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 285 பேர் விடுவிக்கப்பட்டதை நினைவில் கொள்ளுங்கள். 2025 பெப்ரவரி 4ம் திகதியன்று அநுர குமார நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 285 பேரை விடுவித்தார்.
2026 பெப்ரவரி 4ம் திகதியன்று 49 பெரை அநுர குமார விடுவித்தார். அதன்படி, இது ஒரு கேலிக்கூத்தாகும்.
அடுத்து, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக, அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான லக்மாலி ஹேமச்சந்திர, களனிப் பள்ளத்தாக்கு இரயில் பாதையில் உள்ள வீடுகளை இடிப்பதற்குச் சென்றபோது அதற்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டது.
நீதிமன்ற அவமதிப்பு
ஒக்டோபர் 2025-ல் கொழும்பு அபிவிருத்தி சபைக் கூட்டத்தில் அந்த நாடாளுமன்ற உறுப்பினர், எந்த நீதிமன்ற உத்தரவையும் மதிக்கத் தேவையில்லை. நமது சட்டம் நாம் விரும்பியபடி செயல்படுகிறது, யாரையும் அகற்றக் கூடாது என்று கூறினார்.
இது குறித்து சுகிஸ்வர பண்டார முறைப்பாடு அளித்தார். இன்றுவரை, லக்மாலிக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த அநுரவால் முடியவில்லை.

அடுத்து, ஜேவிபி உறுப்பினர்களை விடுவிக்கவும் மற்றவர்களைத் தண்டிக்கவும் மேலும் ஓய்வுபெற்ற மூன்று நீதிபதிகளைக் கொண்ட ஜனாதிபதி நிலக்கரி ஆணைக்குழுவை மே 1ம் திகதியன்று டில்வின் சில்வா நியமித்தார்.
நினைவில் கொள்ளுங்கள், நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்ட இந்த நபர்கள் மீது எந்தவொரு சட்ட அமலாக்க நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.என்றும் சம்பிக ரணவக தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தலுடன் ஆயுதக் கடத்தலும்.. ஷிரான் பாசிக் விவகாரத்தில் நீதிமன்றத்தில் அதிர்ச்சித் தகவல்