முச்சக்கரவண்டி பதிவுகளில் வீழ்ச்சி
இந்த ஆண்டு முச்சக்கரவண்டி பதிவுகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த எட்டு மாத காலத்தில் வெறும் 19 முச்சக்கர வண்டிகள் மாத்திரமே புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறித்த புள்ளி விபரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
முச்சக்கர வண்டிகளின் இறக்குமதி மற்றும் பதிவுகள்

கடந்த காலங்களில் 2020ம் ஆண்டில் புதிதாக 7150 முச்சக்கர வண்டிகளும் அதற்கு முந்திய 2019ம் ஆண்டில் 15490 முச்சக்கர வண்டிகளும் இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டு புதிதாக பதிவு செய்யப்பட்டிருந்தன.
கடந்த 2018ம் ஆண்டு 20063 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டமையே அண்மைக்காலத்தில் ஒரு வருடத்தில் ஆகக் கூடுதலான முச்சக்கரவண்டிகள் பதிவு செய்யப்பட்ட வருடமாக பதியப்பட்டுள்ளது.
பயணிகள் போக்குவரத்து சேவை

அதன் பின்னர் படிப்படியாக முச்சக்கர வண்டிகளின் இறக்குமதி மற்றும் பதிவுகள் குறைந்து வந்துள்ளன. தற்போதைக்கு இலங்கையில் 11 லட்சத்தி 80 ஆயிரம் முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் சுமார் 5 தொடக்கம் ஆறு லட்சம் வரையான முச்சக்கர வண்டிகள் மாத்திரமே பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam
முத்து சொல்ல சொல்ல பதற்றத்தின் உச்சத்தில் ரோஹினி, அப்படி என்ன தெரிந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
எலிமினேஷனுக்கு பிறகு அழுத முகத்துடன் வீட்டிற்கு வந்த பிக்பாஸ் 9 பிரவீன்... அடுத்து நடந்த விஷயம், வீடியோ, இதோ Cineulagam