பின்லாந்தில் விழுந்து நொறுங்கிய உக்ரைனிய ட்ரோன்: நேட்டோ நாட்டு எல்லைக்குள் போர் பதற்றம்
உக்ரைன் - ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர், முதல்முறையாக பக்கத்து நாடான பின்லாந்தின் எல்லைக்குள் ஊடுருவியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அன்று பின்லாந்தின் தென்கிழக்கு பகுதியில் விழுந்து நொறுங்கிய உக்ரைனிய ட்ரோன் ஒன்றில், வெடிக்காத நிலையில் ஒரு சக்திவாய்ந்த வெடிகுண்டு (Warhead) இருந்ததாகப் பின்லாந்து பொலிஸார் திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ள உக்ரைன்
சுமார் 6.7 மீட்டர் இறக்கை விரிப்பு கொண்ட இந்த 'AN-196' ரக ட்ரோன், பின்லாந்து அதிகாரிகளால் பாதுகாப்பான முறையில் வெடிக்க வைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதமோ அல்லது பெரிய அளவிலான சொத்து சேதமோ ஏற்படவில்லை என்றாலும், ரஷ்யாவுடனான போர் ஐரோப்பிய நாடுகளின் எல்லைக்குள் பரவுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவத்திற்கு உக்ரைன் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது.
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஏற்றுமதி வழித்தடங்களை இலக்கு வைத்து ஏவப்பட்ட இந்த ட்ரோன், ரஷ்யாவின் மின்னணு குறுக்கீடுகள் (Electronic Interference) காரணமாகத் திசைமாறி பின்லாந்து எல்லைக்குள் நுழைந்திருக்கலாம் என உக்ரைன் விளக்கமளித்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் ஆகியோர் இது குறித்துத் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.
தீவிரப்படுத்தியுள்ள நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்
"நாங்கள் இருவரும் இந்தச் சூழலை ஒரே கண்ணோட்டத்திலேயே பார்க்கிறோம்; தேவையான தகவல்களைப் பகிர்ந்து வருகிறோம்" என்று ஸெலென்ஸ்கி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபகாலமாக, ரஷ்யாவின் போர் பொருளாதாரத்தை முடக்க உக்ரைன் நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக பின்லாந்து எல்லையை ஒட்டியுள்ள ரஷ்யப் பகுதிகளில் இத்தகைய தாக்குதல்கள் அதிகளவில் நடத்தப்படுகின்றன.
சர்வதேச எரிசக்தி விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, இத்தகைய தாக்குதல்களைக் குறைக்குமாறு உக்ரைனின் சில நட்பு நாடுகள் சமிக்ஞை கொடுத்த போதிலும், பின்லாந்து அதிபர் அத்தகைய கோரிக்கை எதையும் உக்ரைனிடம் முன்வைக்கவில்லை என அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
லூமாகி (Luumaki) பகுதியில் மற்றொரு ட்ரோனின் சிதிலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், அது குறித்தும் பின்லாந்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிரமடையும் பதற்றத்தினால் மூடப்பட்டுள்ள வான்பரப்புகள்! நூற்றுக்கணக்கான விமானங்கள் தொடர்ச்சியாக இரத்து
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri