எரிபொருளுக்காக ஹட்டனில் சாரதிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பு
ஹட்டன் நகரில் உள்ள மூன்று எண்ணெய் நிரப்பு நிலையங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் முடிந்து போனதால் இன்று(22.3.2026) காலை முதல் முச்சக்கரவண்டி உட்பட வாகன சாரதிகள் காலை முதல் நீண்ட வரிசையில் எண்ணெய் நிரப்புவதற்காக காத்திருந்தனர்.
குறித்த எண்ணெய் நிரப்பு நிலையங்களில் நேற்று இரவு முதல் பெற்றோல் டீசல் வழங்கப்படவில்லை எனவும் சிலர் தெரிவிக்கும் அதேவேளை பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாமல் இல்லை விலை அதிகரிக்கப்படும் என்று தெரிந்து கொண்டதால் எண்ணெய் நிரப்பு உரிமையாளர்கள் முடிந்து விட்டது என்று கூறி விட்டு நிலையத்தினை ழூடியுள்ளார்கள் என இன்னும் சிலர் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை நேற்று நல்லிரவு முதல் பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளமையினால் ஹட்டன் மற்றும் மஸ்கெலியா பிரதேசங்களைச் சேர்ந்து முச்சக்கரவண்டி சாரதிகள் தங்களுக்கு தொழில் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் பெட்ரோல் விலையேற்றத்திற்கு ஏற்றவாறு விலை அதிகரித்தால் சவாரி செய்பவர்கள் வரமாட்டார்கள் என்றும் தற்போதுள்ள பொருளாதார நிலையில் அதிக விலை கொடுத்து முச்சக்கரவண்டி செல்வதற்கு மக்கள் தயாராக இல்லை என்றும் அதிகரித்தால் நடந்தே சென்று விடுவார்கள் என்றும் இதனால் மலையக பகுதியில் முச்சகரவண்டியினை நம்பி வாழும் குடும்பங்கள் பாரிய பாதிப்பினை ஏற்படுவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
நீண்ட வரிசை
இன்னும் சிலர் கருத்து தெரிவிக்கையில் தற்போது உள்ள விலையிலும் கிவ் ஆர் கோட் முறைமையிலும் பாரிய அளவில் சவாரி குறைந்துள்ளதாகவும் மேலும் பெற்றோல் விலை உயர்வடைந்துள்ளதனால் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் விலை அதிகரிக்கவும் முடியாமல் ஓடவும் முடியாமல் திண்டாடுவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து இன்னும் சிலர் இவ்வாறு தெரிவித்தனர் உலகத்தில் ஏற்பட்டுள்ள யுத்த நிலை காரணமாக இன்று பல நாடுகளில் பெட்ரோல் டீசல் உட்பட எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலை இலங்கையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாம் அரசை குற்றம் சொல்ல முடியாது வருவதற்கு முகம் கொடுக்க வேண்டியது தான் இவ்வாறான நிலையில் பெட்ரோல் விலையுயர்ந்தாலும் பெற்றுக்கொடுப்பது பெரிய விடயம் என தெரிவித்தனர்.
இந்நிலையில் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 92 ரக பெட்ரோல் 81 ரூபாவாலும்,95 ரக பெட்ரோல் 122 ரூபாவாலும்,ஒட்டோ டீசல் 79 ரூபாவாலும்,சுப்பர் டீசல் 219 ரூபாவாலும் அதிகூடிய தொகையினை அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.




அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri