வாகன சாரதி அனுமதிப் பத்திர காலம் நீடிப்பு
ஆறு மாத காலத்திற்காக விநியோகிக்கப்பட்ட வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை ஒரு வருட காலத்திற்கு நீடிப்பதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைவாக தங்களின் நிரந்தர வதிவிட மாவட்ட அலுவலகத்திற்கு அல்லது கொழும்பு வேரஹெரவில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு சென்று குறித்த காலத்தை நீடித்துக்கொள்ள முடியும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு விடுத்துள்ளது.
வாகன சாரதி அனுமதி அட்டை விநியோகம்
மேலும் தற்போது மோட்டார் வாகன திணைக்களத்திடம் இருக்கும் வாகன சாரதி அனுமதி அட்டைகள் வெளிநாடுகளுக்கு செல்லும் புதிய உரிமம் பெற்றவர்களுக்கு மாத்திரம் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அச்சிடப்பட்ட 450,000 வாகன சாரதி அனுமதி அட்டைகள் எதிர்வரும் வாரங்களில் நாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.