கிளிநொச்சியில் பட்டப்பகலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சாரதி (photo)
கிளிநொச்சியில் பட்டப்பகலில் பாரஊர்தி சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏ9 வீதியில் வைத்தே நேற்று (02.03.2023) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேங்காய் வியாபாரம் செய்து வந்த இருவருக்கும் இடையில் பண கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த பாரஊர்தியின் சாரதிக்கும், கைதான நபருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இருவருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு
சாரதி பணத்தை திருப்பி கொடுக்காது பார ஊர்தியை செலுத்தியுள்ளார்.
இந்நிலையில் இடைமறித்து பணத்தை கேட்டபோது இருவருக்குமிடையில் கருத்து முரண்பாடு முற்றியுள்ளது.
இந்த நிலையில், கூரிய ஆயுதத்தால் சாரதி தாக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
சம்பவத்தில் காயமடைந்த சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
