கந்தளாயில் குழாய் வெடித்து குடிநீர் விரயம் - குழாயை சீர் செய்து தருமாறு கோரிக்கை
திருகோணமலை - கந்தளாய் பிராந்திய நீர் பாவனையாளர் பிரிவுக்குட்பட்ட அணைக்கட்டு பகுதியில் குடிநீர் குழாய் வெடித்துள்ளதால் ஆறு மாத காலமாக குடி நீர் விரயமாக செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு குழாய் வெடித்து நீர் வெளியேறுவதால் நீரின் வேகம் குறைந்துள்ளதாகவும், இரவு பகலாக குடிநீர் வடிகாண்களிலும் வீதிகளிலும் விரயமாகிக் கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குடிநீர் குழாய் வெடிப்பு தொடர்பாக கந்தளாய் பிராந்திய குடிநீர் பாவனைகள் அலுவலகத்தில் அறிவித்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அப்பகுதியில் வசிப்போர் தெரிவித்துள்ளனர்.
இதனை அதற்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள் இரண்டு தடவைகள் சென்று பார்வையிட்டுச் சென்றனர் தவிர நீர் விரயமாவாதை தடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆறு மாதங்களாக விரயமாகிக் கொண்டிருக்கும் குடி நீர் குழாயைச் சீர் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.









அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
