மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் நியமனத்தால் ஏற்பட்டுள்ள இழுபறி (VIDEO)
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவை தரம் ஒன்று அதிகாரியான பொறியியலாளர் ந.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முதல் அமுலாகும் வரையில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத்தினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில காலங்களாக மட்டக்களப்பு மாநகர சபையில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு மத்தியில், நேற்றைய தினம் புதிய ஆணையாளர் ஒருவரை கிழக்கு மாகாண ஆளுநர் நியமித்துள்ளார்.
இன்று காலை அவர் தனது கடமைகளை மட்டக்களப்பு மாநகரசபையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
எனினும் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராகவுள்ள தயாபரன் தனக்கான அறிவுறுத்தல் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லையென தெரிவித்து புதிய ஆணையாளரிடம் பொறுப்பினை ஒப்படைக்காத நிலையில் இது தொடர்பான இழுபறிகள் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது.

மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
தொடர் தோல்வி, ஆனாலும் முயற்சியை கைவிடாத ஷங்கர்.. ரூ. 1000 கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம் Cineulagam