புதிய அரசமைப்புக்கான வரைவு நகல் நவம்பரில் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Sri lanka Gotabhaya Rajapaksha New Constitution
By Rakesh Sep 16, 2021 10:34 AM GMT
Report

புதிய அரசமைப்புக்கான வரைபைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினர், இறுதிச் சட்டவரைபு எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.

அத்துடன், மேற்படி நிபுணர்கள் குழுவின் ஆயுட்காலமும் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கோவிட் வைரஸ் நெருக்கடி நிலைமையால் ஏற்பட்ட சில தாமதங்களைக் கருத்தில்கொண்டே கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.

புதியதொரு அரசமைப்பு உருவாக்கப்படும் என்ற உறுதிமொழியுடனேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிப்பீடம் ஏறினார்.

இந்நிலையில், புதிய அரசமைப்புக்கான வரைபைத் தயாரிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவானது பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளிடமிருந்து புதிய அரசமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் முன்மொழிவுகளைக் கோரியிருந்தது.

இதன்படி பல தரப்பட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மேலதிக விவரங்களுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் இதர தரப்புகளை அழைத்து விளக்கமும் பெற்றிருந்தது.

அதன்பின்னர் விரைவு நகல் தயாரிக்கும் பணி ஆரம்பமானது. தற்போது ஆரம்பகட்ட சட்டவரைவு ஆய்வு நிலையில் உள்ளது என அறியமுடிகின்றது.

சட்டவரைவு திணைக்களத்தின் கண்காணிப்பின் பின்னர் இறுதிவரைவு தயாரிக்கப்படும் எனத் தெரியவருகின்றது.

அதேவேளை, தான் ஆட்சிக்கு வந்து ஈராண்டுகள் நிறைவு பெறுவதற்குள் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US