மக்கள் கடைகளை உடைக்கும் நெருக்கடி நிலை உருவாகுமென எச்சரிக்கை
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை நீடித்தால் மக்கள் கடைகளை உடைத்து உணவு பொருட்களை களவாடக் கூடிய நெருக்கடி நிலை உருவாகும் என தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் சிரேஸ்ட உறுப்பினர் டாக்டர் வசந்த் பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் நாட்டில் தற்பொழுது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமையை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவே உருவாக்கினார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணைய வழி ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடனாக பெறப்பட்டுள்ள பிணைமுறி
2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக நந்தலால் கடமையாற்றி இருந்தார். இந்த காலப்பகுதியில் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட பிணைமுறிகளை கடனாக பெற்றுக் கொண்டதாகவும், 53 பில்லியன் டொலர்கள் ஏற்றுமதியாளர்களினால் வெளிநாடுகளில் பிணையாக வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த காரணிகளினால் பொருளாதார நெருக்கடி நிலைமை உருவாகியது எனவும், அந்நிய செலாவணி முகாமைத்துவ சட்டத்தை மேம்படுத்துவதற்கு முன்னெடுத்த முயற்சியே இதற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், சீனாவிடம் இருந்து கடன் பெற்றுக் கொள்ள எடுக்கப்பட்ட முயற்சியை குழப்பம் வகையில் நந்தலால் வீரசிங்க செயற்பட்டதாகவும் சட்டவிரோதமான அடிப்படையில் இலங்கை வங்குரோத்து அடைந்ததாக அறிவித்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அமெரிக்க தூதுவரின் அறிவுறுத்தல்கள்
வங்குரோத்து நிலை அடைந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் சீனாவினால் உதவ முடியவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதலுக்கு அமைய செயற்படதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அநேகமான மக்கள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர். ஆளும் எதிர்க்கட்சி அனைவருமே அமெரிக்க தூதுவரின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை நீடித்தால் மக்கள் கடைகளை உடைத்து உணவு பொருட்களை களவாடக் கூடிய நெருக்கடி நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




