வைத்தியர் ஜெயசுந்தர பண்டார பதவியிலிருந்து ராஜினாமா
இலங்கை கோவிட் 19 அவசர கால பதில் மற்றும் சுகாதார அமைப்புகள் தயாரிப்பு திட்டத்தின் திட்ட பணிப்பாளர் வைத்தியர் ஜெயசுந்தர பண்டார தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
ஜெயசுந்தர பண்டார சுகாதார அமைச்சிலிருந்து தனது சேவைகளுக்கு வேதனம் எதனையும் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததைக் குறிக்கும் கடிதத்தை தம்முடன் இணைந்திருந்த பணியாளர்களிடம் வழங்கியுள்ளார்.
வைத்தியர் ஜெயசுந்தர பண்டார ஜூலை 15 முதல் தனது பதவியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார்.
கோவிட் 19 அவசரகால பதில் மற்றும் சுகாதார அமைப்புகளின் தயார்நிலை தொடர்பான பணிகளில் அவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.
இதனையடுத்து, இலங்கை கோவிட் 19 அவசரகால பதில் மற்றும் சுகாதார அமைப்புகள்
தயாரிப்பு திட்டத்திற்கு புதிய திட்டப்பணிப்பாளரை நியமிக்க சுகாதார அமைச்சகம்
முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது