சுகாதார அமைச்சின் முன்னாள் பேச்சாளரிடம் சீ.ஐ.டி விசாரணை?
சுகாதார அமைச்சின் முன்னாள் பேச்சாளர் டொக்டர் ஜயருவான் பண்டாரவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடாத்த உள்ளனர்.
நாளைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு டொக்டர் ஜயருவான் பண்டாரவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகமொன்றில் ஊடகவியலாளர் ஒருவருடனான நேர்காணலில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் விசாரணை நடாத்தப்பட உள்ளது.
மக்களை பிழையாக வழிநடத்தக் கூடிய வகையிலான கருத்துக்களை குறித்த நேர்காணலில் டொக்டர் ஜயருவான் பண்டார வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து கண்டறிவதற்கான என்டிஜன் மற்றும் பீ.சீ.ஆர் பரிசோதனைக்காக அறவீடு செய்யும் கட்டணங்கள் தொடர்பில் அவர் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
தற்பொழுது அறவீடு செய்யப்படும் கட்டணத் தொகைகைளை விடவும் மிகவும் குறைந்த செலவில் பரிசோதனை செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் டொக்டர் ஜயருவான் பண்டாரவிடம் விசாரணை நடாத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் டொக்டர் ஜயருவானுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan