இரட்டைச் சம்பியனான திக்கம் அணி
யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகம் வடமராட்சி கழகங்களுக்கிடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டம் மற்றும் கயிறுழுத்தல் சுற்றுப் போட்டிகளில் பெண்கள் அணியினர் இரண்டிலும் திக்கம் அணி சம்பியனாகி சாதனை படைத்துள்ளது.
வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் பெண்கள் A அணியும், கயிறுழுத்தல் சுற்றுப் போட்டியில் பெண்கள் B அணியும் சம்பியனாகின.
வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி
குறித்த வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் 30 கழகங்கள் பங்குபற்றியிருந்தன.
கயிறுழுத்தல் இறுதிப் போட்டி துன்னாலை வல்லியானந்தம் எதிர் பருத்தித்துறை மலையான் சாண்டோ அணி மோதியது. இதில் துன்னாலை வல்லியானந்தா சம்பியனானது.
இந்நிகழ்வில் வடமராட்சிக்குட்பட்ட விளையாட்டு கழகங்களின் வீரர்கள், பார்வையாளர்கள், ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri
