கடற்தொழிலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட டக்ளஸ்
மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலில், பலநாள் மீன்பிடிக் கலன்களில் மூலம் தொழிலில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும், நாட்டில் நிலவி வருகின்ற அண்மைய எரிபொருள் தட்டுப்பாடு, கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் போன்றவை தொடர்பாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நோர்த் சீ எனப்படும் வடகடல் நிறுவனத்தின் உற்பத்திகளை விஸ்தரித்து, அதன் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கரிடம் ஒத்துழைப்புக்களை கோரியுள்ள டக்ளஸ் தேவானந்தா, இன்று வடகடல் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிகளை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, இந்தியாவின் ஒத்துழைப்புக்களை நிறுவனத்தின் செயற்பாடுகளை
வினைத்திறனாக மாற்றுவதற்கான வழிவகைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri