ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு வலு சேர்ப்போம்: திருகோணமலையில் டக்லஸ் கோரிக்கை
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கிவருகின்றேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
எமது வழிமுறையே சாத்தியமானது என்பதும் இன்று நிரூபணமாகியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இம்முறை ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியும் நாட்டுக்கு அவசியமாக இருக்கின்றது. அவரை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களுடனான பரப்புரை
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
குறித்த மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்களுடனான பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு இவ்வாறு உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதில் வடக்கு கிழக்கு மக்கள் தெளிவாக உள்ளனர்.
குறிப்பாக அனுபவமும் ஆற்றலும் உள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்கள் முழுமையாக வாக்களிப்பார்கள் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பது இனவாதம் அல்ல: தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் உறுப்பினர்
ஈ.பி.டி.பி எமது வழிமுறை
இதேநேரம் ஈ.பி.டி.பியினராகிய எமது வழிமுறையே வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு சாத்தியமான தீர்வை தரும்.
எம்முடன் இணைந்து பயணியுங்கள் என நான் மூன்று தசாப்தங்களாக திருமலை மாவட்ட மக்களிடம் அழைப்பு விடுத்து வந்திருந்த போதும் அவர்கள் தவறானவர்களின் வழிநடத்தலிலிருந்து மீளமுடியாதிருந்தமையால் பல்வேறு அசௌகரியங்களை இன்றுவரை எதிர்கொண்டுவர நேர்ந்துள்ளது.
இதேநேரம் குறித்த தவறான வழிநடத்தலை மக்கள் ஓரங்கட்டி அதிலிருந்து வெளிவராவிட்டால் இம்மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் இன்வரும் காலத்தில் இல்லாதுபோகும் சூழ்நிலை உருவாகும் அபாய நிலை உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உலகின் எதிர்காலமே இதுதானாம்! தங்கத்தை விட முக்கியம்..நாடொன்றில் கொட்டிக்கிடக்கும் புதையல் News Lankasri

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
