குழப்ப நிலையில் உள்ள சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம்
சாவகச்சேரி (Chavakachcheri) ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் மேற்கொள்ளும் பணி நிறுத்தம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda), வைத்திய அத்தியட்சகருடன் கலந்துரையாடியுள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இன்று (06.07.2024) காலை 6.30 மணியளவில் வைத்தியசாலைக்கு சென்று குறித்த கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
கடந்த இரு தினங்களாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், வைத்திய சேவைகளை புறக்கணித்து வருகின்றனர்.
பொதுமக்கள் எச்சரிக்கை
இந்நிலையில், வைத்தியசாலையை மேம்படுத்த தன்னால் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளின் போது ஒரு சில வைத்தியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக தற்போது வைத்தியசாலை இக்கட்டான நிலைமையில் உள்ளது என வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா டக்ளஸிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், வைத்தியர்களின் பணிப் புறக்கணிப்புக் காரணமாக கடந்த 24 மணித்தியாளங்களில் தனி ஒரு வைத்தியராக நின்று வைத்தியசாலையை இயங்க வைத்து நோயாளர்களை காப்பாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை விட, வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் சத்திர சிகிச்சைக் கூடம் ஆகியவற்றை இயங்க வைக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் -ஆளணி காணப்படுவதனை அவர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இதற்கிடையில், வைத்தியசாலையில் கூடிய பொதுமக்கள், வைத்தியசாலை இன்று இரவுக்குள் வழமை போன்று இயங்க வேண்டும் எனவும் இல்லையேல் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவுக்கு ஆதரவளித்தும், வைத்தியசாலையை இயக்கக் கோரியும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam

கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam
